இன்றைய ராசி பலன் – 1-1-2020

rasi palan - 1-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர்கள். அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உங்களின் செயல் இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். தம்பதியரிடையே நல்ல புரிதல் உண்டாகும். முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபடுங்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பாராத தனவரவு உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். உங்களின் அறிவாற்றலினால் வெற்றிகிட்டும் இனிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பணியிட சூழலில் அமைதி நிலவும். சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். போதிய வருமானம் காணப்படும். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு போன்றவை திடீரென ஏற்படலாம். பணியிடத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க நீங்கள் அனுசரித்து செல்வது சிறந்தது. முருகனை வழிபடுங்கள்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வேலைப்பளு காரணமாக பதட்டமாக காணப்படுவீர்கள். அதனால் கவனக் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கை தேவை. மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்யுங்கள். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவ அமைதியாக இருப்பதே நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். உங்களின் விடா முயற்சிக்கு தகுந்த பலன்கள் இல்லம் தேடி வந்தடையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பின் அவசியத்தை உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

- Advertisement -

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையப்பெறும். புதிய முயற்சிகள் மேற்கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் மனதை வசீகரம் செய்வீர்கள். உங்களிடம் புதிய மாற்றங்கள் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உங்களின் தன்னம்பிக்கை உங்களுக்கு பலமாக அமையும். ஈசனை வழிபடுவது நல்லது.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் மனநிலை சீரான நிலையில் இருக்காது. எனவே மனதை சாந்தப்படுத்த யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். அனாவசியமாக யாரிடமும் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. தனவரவு திருப்திகரமாக இருக்காது. கணவன் மனைவியிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். மிகவும் சோர்ந்து காணப்படுவீர்கள். தம்பதியரிடையே நல்ல புரிதல் உண்டாக சரியான சூழ்நிலையில் மனம் விட்டு பேசுவது நல்லது. எதிர்பார்த்தபடி பணவரவு இல்லாததால் சோகத்துடன் காணப்படலாம். ஸ்ரீ கிருஷ்ணனை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை நீங்கள் சிறப்பாக்கி கொள்ளலாம்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் பலனளிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வந்தடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதியரிடையே நல்ல புரிதல் உண்டாகும். உங்களுக்கு சாதகமான நாளாக இன்றைய நாள் அமையப்பெறும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

மகரம்:
Magaram rasi
மகர ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் உண்டாகலாம். எதையும் ஒருமுறைக்கு நான்கு முறை யோசித்து செயலாற்றுவது நல்லது. எந்த முடிவுகளையும் இன்றைய நாளில் நீங்கள் எடுக்காமல் இருப்பதே சிறந்தது. சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வது நல்லது. உங்களின் முன்கோபத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் எனவே அமைதியைக் கடைபிடிப்பது சிறந்தது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். சிறப்பாக செயல்படுவதன் மூலம் முன்னேற்றப் பாதைக்கு செல்லலாம். தன வரவு திருப்திகரமாக இருக்காது. தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் கடின முயற்சிக்கு நற்பலன்கள் உண்டாக பெரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ நல்ல சூழ்நிலையில் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். அம்பிகையை வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்