இன்றைய ராசி பலன் – 01-09-2020

rasi palan - 1-9-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைக்கு ஏற்ப ஊதிய உயர்வு பெறுவீர்கள். கலை மற்றும் பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு கணவன் மனைவி இடையே சிறப்பாக காணப்படும். வாகன வகையில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்கள் மூலம் ஆதாயம் மற்றும் அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். நீண்டநாள் தாமதப்பட்ட சொத்து விஷயங்கள் முடிவுக்கு வரும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தனவரவு எல்லையில்லா மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுபகாரிய முயற்சிகள் சிறு தடைகளுக்குப் பின் நல்லபடியாக முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர் தொடர்பான அனுகூலமான பலன்களை தரும். உங்களுடைய பேச்சுக்கு சமுதாயத்தில் நல்ல மரியாதை இருக்கும். உயர் கல்வி பயில்பவர்களுக்கு புதியபாதை உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பல புதிய நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் மூலம் சுபகாரிய செலவுகள் சாத்தியக் கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் வேலை பளு காரணமாக உடல் சோர்வு வரும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சகோதர சகோதரி வழியே சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விஷயங்களை மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். அரசு வழி விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. பதவி உயர்வு, உத்தியோக உயர்வு போன்றவை ஒரு சிலருக்கு ஏற்படலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுய தொழில் புரிபவர்களுக்கு பண சிக்கல்கள் தீரும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். பைரவர் வழிபாடு நன்மைகள் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். மகான்களின் தரிசனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர தேவைகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படுத்துவதன் மூலம் பொருளாதாரப் பிரச்சினையை சுலபமாக எதிர்கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப நபர்களுக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் செய்வது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வயிற்று உபாதைகள், உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். சமூக சேவையை ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான அமைப்பு என்பதால் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியாகும். எதிர்பாராத வகையில் பணவரவு ஏற்படலாம். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் ரீதியான நவீன உபகரணங்கள் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -