இன்றைய ராசி பலன் – 01-04-2021

Rasi Palan

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாகத்தான் அமையப்போகின்றது. வேலையில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்கள் கூட சரியாகிவிடும். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமான நாளாகத்தான் இருக்க போகின்றது. சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்து, உங்களுடைய வேலைகளை உடனே முடித்தால் பிரச்சனை இல்லை. அப்போது தேவையற்ற மனக் குழப்பங்கள் வந்துபோகும். பெரிதாக பாதிப்பு இல்லை.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. வேலையில் பாராட்டும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலை விரிவு படுத்தலாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட காலமாக வராத கடன் வசூலாகும். எதிர்பாராத பண வரவு மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் இன்றைய நாள் கவனத்துடன் செயல்பட வேண்டும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால், சில சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உஷாராக இருக்கவும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக வெளியிடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு உள்ளது. வேலையில் சின்ன சின்ன சிக்கல் வரும். தொழில் செய்யும் இடத்தில் யாரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் பின்னடைவு ஏற்படும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கக்கூடிய நாளாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இருக்கும் செயலை இன்றைக்கு செய்தால் நிச்சயம் வெற்றிதான். சொந்த தொழில் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். புதிய முயற்சிகளை தாராளமாக தொடங்கலாம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு முடிவையும் எடுக்கலாமா வேண்டாமா என்ற மன சஞ்சலம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மனம் தெளிவு பெறும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பாராட்டிக் கொண்டே இருக்கப் போகிறார்கள். சந்தோஷத்தில் திக்கு முக்காட போகிறீர்கள். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவைக் கொடுக்கும் நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவுதான் பணம் கையில் இருந்தாலும் பணம் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்தையும் முட்டிமோதி ஜெயிக்கும் அளவிற்கு உங்களுடைய விடாமுயற்சி உங்களுக்கு துணையாக நிற்கும். நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய நாள் தான் இது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மிக மிக அவசியம் தேவை. இருக்கும் வேலையை விட்டுவிட்டு, பரக்க ஆசைப்படாதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். அனுசரித்துச் சென்றால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். வார்த்தைகளில் மிக மிக கவனம் தேவை.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 31-3-2021.