இன்றைய ராசி பலன் – 2-1-2020

rasi palan - 2-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் மன இறுக்கத்திற்கு ஆளாக வாய்ப்புகள் இருக்கிறது. பணத்தை கையாள்வதில் எச்சரிக்கை தேவை. பணியிட சூழலில், குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உங்களின் திறமையால் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் உண்டாகலாம். தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். சக பணியாளர்களிடத்தில் நட்பு பாராட்டுவது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அமைந்திருக்கின்றன. உங்களுக்கு சாதகமான சூழ்நிலையால் மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். துணையுடன் குடும்ப முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்துவீர்கள்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். மிகவும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். திட்டமிடலின் மூலம் பல நற்பலன்கள் வந்தடையும். புதிய வாய்ப்புகளும் இல்லம் தேடிவரும். வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சேமிப்பின் அவசியத்தை உணர்வீர்கள். உங்களின் துணைக்கென்று நேரம் ஒதுக்குவது அன்பு அதிகரிக்க வழிவகுக்கும். விநாயகரை வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

- Advertisement -

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நேரத்தை மிச்சப்படுத்தி நீங்கள் செய்யும் சிறப்பான காரியங்கள் உங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும். இன்றைய நாளில் நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உங்களின் இனிமையான அணுகுமுறையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பைரவரை வழிபடுவது சிறந்த நாளாக அமைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கடினமான சூழ்நிலையிலும் உங்களின் முயற்சிகளை கைவிட மாட்டீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். தம்பதியரிடையே நல்ல புரிதல் உண்டாக மனம் விட்டு பேசுவது நல்லது.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் சரியாக நடந்தேறும். நிதி பற்றாக்குறை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கவனக் குறைவால் தவறுகள் நேரலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்க அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனச்சோர்வுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் கோபத்தால் சிலவற்றை இழக்க நேரலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மிகவும் அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இறை வழிபாடுகளில் ஈடுபடுவது சிறந்த நாளாக அமைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டமான நாளாக இருக்கும். பரபரப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். பணியிட சூழலில் கவனமாக இருப்பது நல்லது குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களின் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்கு இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தானா வரவு குறைவாக காணப்படும். உங்களின் திறமைக்கு ஏற்ற பலன் கிட்டும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் கோபத்தை சிலர் சீண்டி விடுவார்கள். கோபத்தை அடக்கி நிதானத்தை கடைபிடிப்பது சிறந்த நாளாக அமைக்க உதவும். புதிய நண்பர்களின் மூலம் முன்னேற்றப்பாதை உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்