இன்றைய ராசி பலன் – 02-03-2018

12-rasi

மேஷம்:
mesham
புதிய ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

ரிஷபம்:
rishabam

அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். எதிர்பார்த்த பணம் மாலைக்குள் வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை கடைபிடிக்கவும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:
மன உறுதியுடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள், திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கடகம் :

கணவன் மனைக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கக்கூடும். அலுவலகத்தில் பணியாளர்களால் தொந்தரவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

- Advertisement -

சிம்மம்:
simam
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட கூடுதலான லாபம் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

கன்னி:

தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தாருடன் தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்த படியே அமையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவித்துக்கொள்ளுங்கள்.

துலாம்:

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. கொடுத்த கடன் எதிர்பார்த்த படியே வட்டியுடன் கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளால் சற்று சோர்வாக இருப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

விருச்சிகம்:

அனுகூலமான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். குடும்பத்தாரோடு ஆலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுங்கள், எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் தொந்தரவுகள் உண்டாகும். பிறகு சரி செய்து விடுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
magaram

மன உறுதியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தாய் வழியில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். அலுவலத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

கும்பம்:

இன்று நிதானமாக செயல்படுங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு பயணம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் இன்று விற்பனை குறைவாகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து நல்லது.

மீனம்:

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்த்து கொள்ளுங்கள். தாய் வழியில் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளால் மனஉளைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் இன்று மந்தமாகத்தான் இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.