இன்றைய ராசி பலன் 02-06-2020

Today Rasi Palan
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட்டு, எல்லா வேலைகளிலும், சுலபமாக வெற்றியடையும் நாளாகத்தான், இந்த நாள் இருக்க போகின்றது. சொத்து சம்பந்தமாக ஏதாவது பிரச்சனை இருந்தால், அந்த விவகாரத்தை இன்று தீர்த்துக் கொள்ளலாம். வெற்றி உங்களுக்கு சாதகமாக வரும்.  வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் அலுவலகப் பணி சீராக செல்லும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலைகளை, நீங்களே செய்து கொள்ள வேண்டும். யாரை நம்பியும் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக சொல்லி விடாதீர்கள். எந்தப் பொறுப்பையும் மற்றவர்கள் கையில் கொடுத்து விடாதீர்கள். அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் நண்பர்களிடம் கூட உஷாராக தான் பேசவேண்டும். அனாவசிய பேச்சு என்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுனராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தரக்கூடிய நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தத் தொழிலில், வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை அமையும். பயணத்தின் போது கட்டாயம் கவனம் தேவை. பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று, கடுமையாக உழைத்தால் தான் பலனை எதிர்பார்க்க முடியும். வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று நினைத்து, சோம்பேறித்தனப்பட்டு உட்கார்ந்து விடாதீர்கள். உழைத்தால் வெற்றி நிச்சயம் உண்டு. சோம்பேறித்தனமாக இருந்துவிட்டால், சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது உஷார்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று திறமையாக, உங்களது காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பேச்சு சாதுர்யம் வெளிப்படும். கடன்தொகை வசூலாகும். அலுவலகத்தில் உங்களுக்கு உதவி செய்வதற்கு உடன் பணிபுரிபவர்கள் தாங்களாகவே முன்வருவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மந்தமான சூழ்நிலையே நிலவும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும் கூட, ஏதோ ஒரு பிரச்சினை மனதை உறுத்திக்கொண்டே இருக்கும். அலுவலகத்தில் அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து விலகும். சற்று சுமாராக தான் இந்த நாள் செல்லும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டியது மிக அவசியம். தேவை இல்லாத வார்த்தையை விட்டு விட்டால், பிரச்சினை பெரிதாகிவிடும். அமைதியாக இருந்து கொள்வது நல்லது. உங்களது மேலதிகாரிகள் சொல்லும் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். எதிர்த்து பேசக்கூடாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகப் பணியில் அதிக கவனத்தோடு செயல்பட்டால் வெற்றி. உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எல்லோருடைய ஆதரவும் கிடைக்கப் போகின்றது. நீங்கள் உதவி என்று கேட்காமலேயே எல்லோரும் வந்து உதவிக்கரம் நீட்டப் போகிறார்கள். சுகபோகமான நாள் தான். நீங்கள் அலுவலகத்தில் எடுக்கும் எல்லா முயற்சிக்கும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கப் போகின்றது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை அதிவேகமாக செய்யப் போகிறார்கள். இன்று புத்துணர்ச்சியோடு தங்களுடைய வேலைகளை விரைவாக முடித்து, வெற்றி அடையப் போகிறார்கள். இதனால் உங்களுடைய அலுவலகத்தில் நல்ல பெயரை வாங்க போகிறீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று சின்னசின்ன சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை செய்யும் போதும் கொஞ்சம் கவனமாக இருந்தால் பிரச்சனை வராமல் தப்பித்துக் கொள்ளலாம். பொறுமையோடு செயல்பட்டால் நன்மை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியடையப் போகும் நாள் என்றே சொல்லலாம். கடந்த சில நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கெல்லாம் கூட இன்று தீர்வு கிடைத்துவிடும். மனமகிழ்ச்சியோடு அலுவலக பணியில் ஈடுபட்டு நல்ல பெயரை வாங்க போகிறீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -