இன்றைய ராசி பலன் – 03-01-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டு களைப் பெறுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷபம்:
rishabam
இன்றைக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவையான பணம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து வரும் என்று நீண்டநாள்களாக எதிர்பார்த்த செய்தி இன்றைக்கு வந்து சேரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு வகையில் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு உற்சாகம் தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

இதையும் படிக்கலாமே:ஜனவரி மாத பலன்

கடகம் :

- Advertisement -

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்துவிடுவீர்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும், அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:
simam
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு குடும்ப விஷயமாக வெளி யூர்களுக்குச் செல்ல நேரிடும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியா பாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

அரசுத்துறை அதிகாரிகளின் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் உண்டாகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

துலாம்:

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத் தான் இருக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.

விருச்சிகம்:

வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள்.

மகரம்:
magaram
பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று உங்களுக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கும்பம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் மற்றவர் களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

இதையும் படிக்கலாமே:ஜனவரி மாத பலன்

மீனம்:

இன்றைக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததுபோலவே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -