இன்றைய ராசி பலன் – 3-1-2020

rasi palan - 3-1-2020

மேஷம்:
Mesham Rasi
இன்றைய நாள் நீங்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் ஆற்றலுக்கு மீறிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்க பட்டிருக்கும். நீங்கள் கவனமாக கையாள்வதன் மூலம் பல நல்ல பலன்களை பெறலாம். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவ மனம் விட்டு பேசுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் கவனம் தேவை. கவனக்குறைவினால் சில இழப்புகளை சந்திக்க நேரிடலாம். சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு திருப்திபடுத்தும். நீங்கள் எந்த முடிவுகளை எடுத்தாலும் அதில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. உங்களின் விடா முயற்சிக்கு உரிய பலன்களை அனுபவிப்பீர்கள். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்திலும் சரி வெளிநபர்களிடத்திலும் சரி நீங்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். நிதானத்தை கையாள வேண்டும். இல்லையெனில் பல விபரீதங்களை சந்திக்க நேரலாம். பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. தம்பதியரிடையே ஒற்றுமை நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. பணியிடத்தில் அமைதி நிலவும். விநாயகரை வழிபடலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். உங்களின் கடமைகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். அதனால் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை தேவை. உங்களின் அன்பான அனுசரணையான பேச்சால் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருப்திகரமான நாளாக இருக்கும். இன்றைய நாளில் முக்கிய பல முடிவுகளை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உங்களின் பலகால உழைப்பிற்கு நற்பலன்கள் வந்தடையும். தைரியமாக செயல்படக்கூடிய நாளாக இருக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டமான நாளாக இருக்கும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில் குடும்பத்தில் அமைதி குறையும் வாய்ப்புகள் இருக்கின்றன. தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட நேரிடலாம். அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாளில் விரக்தியுடன் காணப்படுவீர்கள். சிலரின் வார்த்தைகளால் நீங்கள் காயப்பட நேரலாம். உங்களுக்கு மனதிடம் அவசியம் தேவை. நீங்கள் யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இறை வழிபாடு சிறந்த பலனை தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் இன்றைய நாளில் உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகலாம். குடும்ப நபர்கள் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி இருவரும் நல்ல சூழ்நிலையில் மனம் விட்டு பேசுவதானால் அன்பு பெருகும். புதிய முயற்சிகள் பலன் தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாளாக இருக்கும். உங்களின் கவனக்குறைவால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த வாக்குவாதத்திலும் இன்றைய நாளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது சிறந்தது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் விலகிச் செல்வதே நல்லது. இல்லையெனில் விபரீதத்தில் கொண்டுவந்து முடியலாம். எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும். சிவவழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கி தரும்.