இன்றைய ராசி பலன் – 04-02-2020

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.தசா புக்திகள் சாதகமாக இருப்பவர்களுக்கு தொலைந்த பொருள் கிடைப்பது, மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாலைவேளையில் சிலருக்கு லேசான தலைவலி ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்கு எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

மிதுனம்:
midhunam

மனதில் தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். எதிர்பாராத விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

சிம்மம்:
simmam

தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும், பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்

கன்னி:
Kanni Rasi

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அஸ்தம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:
virichigam

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்

தனுசு:
Dhanusu Rasi

இன்று செலவுகள் அதிகரிக்கும். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரத்தில் கொள்முதலுக்காகக் கூடுதல் பணம் செலவழிக்கவேண்டி வரும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நண்பர்களின் தொடர்பு உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வீட்டிலும் பயணத்தின்போதும் பொருட்கள் களவு போக வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:
meenam

தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். காலையிலேயே கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைக்கக்கூடும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் பணியாளர்களால் வீண் செலவுகளும் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.