இன்றைய ராசி பலன் – 03-09-2020

rasi palan - 3-9-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடைபெறும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் தேவையில்லை பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபகரமான பலன்கள் கிடைக்கும். தாராள தன வரவு இருப்பதால் குடும்பத் தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்து விடுவீர்கள். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் உங்களுடைய வேலைகளை சரியாக செய்வீர்கள். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேடிக்கையாக பேசி மற்றவர்களை கவரும் உங்கள் ராசிக்கு தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் உண்டு. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து உபயோகமான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் உங்கள் ராசிக்கு எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் குறைத்துக்கொண்டு பேசுவது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவு திருப்தியாக இருக்கும் என்பதால் நிம்மதி இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் அசதி கூடிய வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சியும், ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். வாகன வகையில் தேவையற்ற விரயங்களை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் உடன் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இருந்தாலும் வீட்டு தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்து விடுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் மனம் மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி கைகூடும். பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தைரியமாக போராடும் குணம் கொண்ட உங்கள் ராசிக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படுவதற்கு உரிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்திருக்கும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -