இன்றைய ராசி பலன் – 4-1-2020

rasi palan - 4-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். எதிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது நல்லது. தனவரவு திருப்திகரமாக இருக்காது. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. தம்பதியரிடையே ஒற்றுமை நிலவ அனுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக காணப்படும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பல நல்ல வாய்ப்புகள் உங்களை நாடிவரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதியர் இருவரிடமும் பரஸ்பர அன்பு நீடித்திருக்கும். தனவரவு திருப்தி தரும். சேமிக்கும் பழக்கத்தை கையாளுங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். எதிர்பாராத நபரின் வருகையால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாள் கழித்து உள்ளம் மகிழ்ச்சியுடன் காணப்படும். விநாயகரை வழிபடலாம்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் அமையும். வீண் செலவுகள் வந்து சேரும். சுப விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. முக்கிய நபர்களை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். மன அமைதிக்கு இறைவழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களின் விடாமுயற்சியால் நற்பலன்கள் பல கிடைக்கப்பெறும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகள் பலன் தரும். சக பணியாளர்களிடத்தில் நட்பு பாராட்டுவது நல்லது. இல்லத்தில் அமைதி நிலவ ஒற்றுமையுடன் அமர்ந்து பேசுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் முன்கோபத்தால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் எனவே அமைதியாய் கடைப்பிடிப்பது நல்லது. தன வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எச்சரிக்கை தேவை. உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கலாம் மனோதிடம் பெற அனுமனை வழிபடுவது சிறந்தது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உங்களின் அறிவாற்றலால் பல சாதனைகள் நிகழ்த்துவீர்கள். பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்றைய நாளில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் இன்றைய நாளில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுப விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவ மனம்விட்டுப் பேசுவது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு உங்களின் கனிவான அக்கறை தேவைப்படலாம். எதையும் அலட்சியம் செய்யாதீர்கள். இறை வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்க நேரிடலாம். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவது நல்லது.