Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (04/06/2019): மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமையும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று நீங்கள் பிறரின் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவியவர்களுக்கு கைம்மாறு செய்யும் நேரம் இன்று கூடி வரும். அலுவலகத்தில் சில சூழ்நிலைகள் இன்று உங்களுக்கு சாதகம் இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அதை கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். சுற்றுலா மற்றும் பயணம் இன்று ஆனந்தத்தைத் தரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள். ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். உங்கள் பாஸ் கவனிப்பதற்கு முன்பு, நிலுவையில் உள்ள வேலைகளை முடித்திடுங்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும், அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பிள்ளைகள் மீது அதிக கவனம் தேவைப்படும். ஆனால் ஆதரவாக அக்கறையாக நடந்து கொள்வார்கள். வேலையில் கவனம் செலுத்தினால் வெற்றியும் அங்கீகாரமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள். உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:
virichigam

நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

மகரம்:
Magaram rasi

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள். உங்கள் துணையின் தேவைகள் இன்று உங்களை சலிப்படைய செய்யலாம். அவிட்டம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும். அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அமைதியான தூய்மையான காதலை உணர்ந்திடுங்கள். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். திருமண வாழ்வை இனிமையாக்க நீங்கள் இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமையும்.

மீனம்:
meenam

இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வீட்டு வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. பயணம், பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -