இன்றைய ராசி பலன் – 04-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiவாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiபிற்பகலுக்கு மேல் எதிர்பாராத சில பிரச்னைகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

midhunamதாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது.குடும்பத்தினருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiமாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ஜூலை மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம்:

- Advertisement -

simmamசிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

கன்னி:

Kanni Rasiசிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

துலாம்:

Thulam Rasiவழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உற்சாகமான நாளாக இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:

virichigamவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiதாயின் அன்பும் ஆதரவும் சோர்ந்த மனதுக்கு உற்சாகம் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். குரு பகவானின் அருளால் சிலருக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:

Magaram rasiஇன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். சிலருக்குத் தாய்மாமனின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasiஉற்சாகமான நாளாக அமையும். இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவி இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் ஏற்படும்.

மீனம்:

meenamமாலையில் உறவினர்களுடன் பேசி மகிழும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.
அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -