இன்றைய ராசி பலன் – 04-09-2020

rasi palan - 4-9-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தி செய்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களைப் புரிந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக பணத்தை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எதிலும் நிதானத்துடன் இருப்பது இன்றைய நாளை சிறப்பாக்கி தரும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி லாபம் பெருகும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் மந்தமான சூழ்நிலை இருந்தாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றகரமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் சிலருக்கு கிடைக்கப்பெறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நடைபெறும் சுபகாரிய முயற்சிகள் நல்ல பலன் தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் செய்ய நினைப்பவர்கள் அனுகூலமான பலன்களை காணலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடிக்கும். வெளியூர் தொடர்புகளால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சிக்கல்கள் இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளி நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றகரமான பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியாக நல்ல லாபம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் தடை இன்றி நடைபெறும். வியாபார ரீதியாக பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியமான ஒன்றாக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -