இன்றைய ராசி பலன் – 5-1-2020

rasi palan - 5-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்க நாளாக இருக்கும். எதிர்பாராத நிகழ்வுகளால் குழம்பிப் போவீர்கள். எவரையும் எளிதாக நம்பி விடும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஈசனை வழிபடுவது இன்றைய நாளை சிறப்பாக தரும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்களுக்கு ஓய்வு தேவைப்படலாம். மன இறுக்கத்துடன் காணப்படுவீர்கள். மனதை அமைதிப்படுத்த வெளியிடங்களுக்கு சென்று வருவது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை. எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். சுப விராயங்கள் ஏற்படலாம். வெளி இடங்களுக்கு சென்று வருவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன்-மனைவி இடையே புரிதல் உண்டாகும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. வீண் விவாதங்களை தவிர்த்து அனுசரணையாக இருப்பது நல்லது. பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்குரிய நாளாக இருக்கும். ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. வெளி உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும். அன்பு அதிகரிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு தகுந்த பொறுப்புகள் கொடுக்கப்படலாம். சிறப்பாக செய்வதன் மூலம் புதிய பாதைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் கவனம் தேவை. மனதை அலைபாய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.தம்பதியரிடையே புரிதல் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டமான நாளாக இருக்கும். பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்களுக்கு கவனச்சிதறல் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை. எதையும் யோசித்து செயலாற்றுவது நல்லது. நிதி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. குடும்பத்திற்கு நேரத்தை செலவிடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தபடி நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தனவரவு உண்டாகும். இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதியரிடையே புரிதல் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியான நாளாக இருக்கும். உங்களின் விடாமுயற்சிகு உரிய பலன்களை பெறுவீர்கள். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் ஏற்படலாம். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் சிக்கல் உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலை பளு காரணமாக குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள். உங்களின் கோபத்தால் சிலரின் மனம் காயப்படும் எச்சரிக்கை தேவை. வினை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. கவனம் தேவை. தன வரவு திருப்திகரமாக இருக்கும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். வெளியிடங்களுக்கு சென்றால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சண்டை சச்சரவுகளில் தலையிடாமல் இருப்பது இந்த நாளை அமைதியாக செல்வதற்கு வழிவகுக்கும். குடும்ப உறவுகளிடையே பிரச்சனைகள் உண்டாகலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் கல்வியை விஷயத்தில் கவனம் தேவை.