இன்றைய ராசி பலன் – 05-03-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
தாய்வழி உறவில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:
Midhunam
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் சிறுசிறு சங்கடங்களும் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இதையும் படிக்கலாமே: மிதுன ராசி பொதுவான குணங்கள்

கடகம் :
மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாகப் பாடுபடவேண்டி இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

- Advertisement -

சிம்மம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக உங்கள் பெயர் பரிசீலிக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்..

- Advertisement -

கன்னி:

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்குக் குடும்பம் தொடர்பான பணிகளுக்காக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பது உற்சாகம் தரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்:

மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சியை இன்று தவிர்க்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

தனுசு:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவ லகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: தனுசு ராசி பொதுவான குணங்கள்

மகரம்:
magaram
தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். வீண் அபவாதம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வாக இருப்பீர்கள். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டு.

மீனம்:

இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கக் கூடுதலாக உழைக்கவேண்டி வரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -