Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (05/06/2019): எதையும் நிதானமாக சிந்தித்து முடிவெடுங்கள்

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

எதிர்பாராத பில்கள் இன்று உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். இன்று உங்கள் காதல் ஒரு புதிய உச்சத்தை தொடும். இந்த நாள் உங்கல் காதலின் புன்சிரிப்பில் தொடங்கி உங்கள் இருவரின் இன்ப கனவுகளில் முடியும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சங்கடம் நேரிடும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். இன்று நிலுவையில் உள்ள கடன்கள் வசூலாகும். புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கிடைக்கும். அலுவலக வேலையில் அதிகமாக மூழ்கியிருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழு வாய்ப்புள்ளது. திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

சிம்மம்:
simmam

இன்று எதையும் நிதானமாக சிந்தித்து முடிவெடுங்கள். குறிப்பாக பண விஷயத்தில் நிதானம் தேவை. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். தேவையான அளவுக்குப் பணம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படும்.

துலாம்:
Thulam Rasi

ன்று உடல் ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் பணம் முதலீடு செய்வதாக இருந்தால் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

தனுசு:
Dhanusu Rasi

எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும். பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் சகோதாரர்களால் நன்மை ஏற்படும்.

மகரம்:
Magaram rasi

இன்று எதிலும் வேகமாக முடிவு எடுக்காதீர்கள். குறிப்பாக பண விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள். இன்று நீங்கள் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அந்த பயணம் அதிக பயன் தருவதாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இந்த புதியவர்களுடன் பழகுகையில் எச்சரிக்கையாக இருங்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் இருந்து தள்ளியிருங்கள். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். சில சமயம் உங்கள் உறவை காப்பாற்ற நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.

மீனம்:
meenam

நண்பர்களால் சிறு தொல்லைகள் ஏற்படும். பணம் சம்பந்தமாக யாருடனும் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்