Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (05/07/2019): எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். கோர்ட் வழக்கு தள்ளிப்போகும். தசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களால் நல்ல திருப்பம் ஏற்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமார்தான். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் உடல் நலன் பாதிக்கப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

உற்சாகமாக நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்கு இன்றைய ராசி பலன் படி பிற்பகலுக்குமேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்:
Magaram rasi

அனுகூலமான நாள். எடுத்த காரியங்கள் இனிதாக முடியும். தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:
meenam

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நண்பர் களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர் களால் செலவுகளும் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -