இன்றைய ராசி பலன் – 05-09-2020

rasi palan - 5-9-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் திறம்பட சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் காணப்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் இனிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் நீங்கும். விநாயகரை வழிபடுவது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பணத் தேவைகள் யாவும் சுலபமாக பூர்த்தி செய்து விடுவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் லாபகரமான பலன்களைக் காண்பீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்து காணப்படும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். பைரவர் வழிபாடு செய்து வந்தால் மிகவும் நல்லது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் லாபகரமான உங்களை காண்பீர்கள். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது மிகவும் நல்லது. ஒரு சில தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. முருக வழிபாடு செய்வது ஏற்றம் தரும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். எந்த ஒரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டுடன் செயல்படும் உங்கள் ராசிக்கு எதிலும் கவனமாக இருக்கவேண்டிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்னோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு ஏற்றம் உண்டாக வழி வகுக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் முன் கோபத்தை குறைத்துக்கொள்வது மிக மிக நல்லது. தேவையற்ற வீண் வாக்குவாதங்களால் மன சங்கடங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு லாபம் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம். வெளியூர் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகள் இன்றி வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்கள் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கைகூடும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொள்வீர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். எதிர்பாராத நபர்கள் மூலம் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாயிலாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ இனிய சுபகாரியங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.