இன்றைய ராசி பலன் – 6-1-2020

rasi palan - 6-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். இல்லறத்துணை வழியே உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களின் கனிவான பேச்சால் மற்றவர்களை கவருவீர்கள். சகோதரர் வழியில் சங்கடங்கள் உருவாகலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள நேரலாம். அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ள நேரலாம். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சிகள் கைகூடும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. மனைவி வழியில் மகிழ்ச்சிகள் உண்டாகலாம். மன சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும் வழி உண்டு. எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: 2020 புத்தாண்டு ராசி பலன்

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கலாம். அதனால் ஆதாயம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். அவர்களின் ஆசியும் கிடைக்கப் பெறும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படலாம். யோகா மேற்கொள்ளலாம்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் எடுப்பதற்கான சாதகமான சூழ்நிலை இருக்கிறது. யாரிடம் பேசினாலும் கவனமாக பேசுவது நல்லது. பொறுமை அவசியம். எதிர்பாராத தனவரவு உண்டாகலாம். அரசாங்க வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படலாம். மனம் அமைதி பெற தியானம் மேற்கொள்ளலாம்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத விஷயங்கள் நடைபெற்று குதூகலத்துடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொள்ளுங்கள். உங்களின் விடா முயற்சிக்கு தகுந்த பலன் கிட்டும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்தபடி உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி சரியாக நடக்கும். இறை வழிபாடுகளில் ஈடுபடுவது சிறப்பான பலன்களை தரும். சகோதரர் வழி அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். சுப விராயங்கள் ஏற்படலாம். வெளி இடங்களுக்கு சென்று வருவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன்-மனைவி இடையே புரிதல் உண்டாகும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். பிள்ளைகளின் கல்வியை விஷயத்தில் கவனம் தேவை.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக காணப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வழியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்கள் இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவீர்கள். வேலை பளு காரணமாக அனைவரிடமும் கோபத்துடன் பேசுவீர்கள். அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. மன அமைதிக்கு ஸ்ரீமன் நாராயணனை வழிபடுவது சிறந்தது. எந்த காரியத்தையும் இந்நாளில் புதிதாக செய்யாமல் இருப்பது நல்லது.