இன்றைய ராசி பலன் – 06-03-2018

12-rasi

மேஷம்:
mesham
புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த பனஉதவி கிடைக்கும். சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மிதுனம்:
Midhunam
மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான ஆரோக்கியக் குறைபாடு ஏற்படக்கூடும். சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகம் தரும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கடகம் :
திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.. தாய்வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமை அவசியம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சிம்மம்:
simam
கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் முடிந்துவிடும். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக் கூடும். தேவையான பணம் வந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச்செலவு ஏற்படக்கூடும்.

- Advertisement -

துலாம்:

மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான ஆரோக்கியக் குறைபாடு ஏற்படக்கூடும். சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகம் தரும். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மற்றபடி பிரச்னை இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

இதையும் படிக்கலாமே:
  மாசி மாத ராசி பலன்

தனுசு:

அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்:
magaram
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் பணிகள் அதிகரித்தாலும் அலட்டிக் கொள்ளாமல் செய்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்னை ஏற்படக்கூடும். பொறுமையுடன் சமாளிக்கவேண்டும். சிலருக்கு வெளியூர்க் கோயில்களை தரிசிக்கவும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மறைமுக எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு தாய்மாமன் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். அதிகப்படியான செலவுகளின் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். தாயின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.