Rasi palan : இன்றைய ராசி பலன் – 06-05-2019

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். சிலருக்கு உறவினர்களால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

மிதுனம்:
midhunam

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

சிம்மம்:
simmam

காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும். மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். கடவுளின் அருளால் சிலருக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகமான பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

துலாம்:
Thulam Rasi

உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

மனம் உற்சாகமாகக் காணப்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களின் போது கூடுதல் கவனம் தேவை.

தனுசு:
Dhanusu Rasi

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

மகரம்:
Magaram rasi

மகான்களின் தரிசனம் போன்ற சுப பலன்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழியில் சிறு சங்கடங்களைச் சந்திக்கவேண்டி வரும்.

மீனம்:
meenam

மீன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. உறவினர்களால் சஞ்சலம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -