Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/06/2019): நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும்

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

இன்று அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார். புதிய முயற்சியை தொடங்கும் சிந்தனையில் இருந்தால் விரைவாக முடிவெடுங்கள். உறவினர்களுடன் சற்று ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:
midhunam

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள். உறவினர்களால் ஆதாயத்துடன் செலவுகளும் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உங்களின் பெற்றோர்களின் ஆதரவால் நிதி பிரச்சினை தீரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பீர்கள். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அலுவலகத்தில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

சிம்மம்:
simmam

தொடர் முயற்சிகள் இன்று வெற்றியை தரும். அதிகப்படியான செலவுகள் செய்ய நேரிடும். இன்று உங்கள் துணையின் உடல் நலத்தில் சில கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் அரவணைப்பும் ஆதரவும் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சில் பொறுமை அவசியம்.

துலாம்:
Thulam Rasi

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்விகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

இன்று திடீர் பணவரவிற்கு வாய்ப்புண்டு. வாழ்கை துணையுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு. அலுவலகத்தில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது இன்று அவசியம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களால் சில நல்ல திருப்பங்களும் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

உற்சாகமான நாள். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை யிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும். தாய்மாமன் வழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணமம் செல்ல நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:
meenam

உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், புது முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்