இன்றைய ராசி பலன் – 06-07-2018

12-rasi

மேஷம்:

Mesham Rasiஉறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்:

Rishabam Rasiவெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். கனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். நீண்டநாள்களாக நினைத்திருந்த குலதெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

midhunamமாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:

Kadagam Rasiசிலருக்குப் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். விரய சந்திரனால் திடீர் செலவுகள் ஏற்படுவதன் காரணமாக சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

சிம்மம்:

simmamதந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கன்னி:

Kanni Rasiஎதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக்கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

ஜூலை மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

துலாம்:

Thulam Rasiசிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

virichigamசிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

தனுசு:

Dhanusu Rasiமாலையில் நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:

Magaram rasiதந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். திருவோணம்திருவோணம் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

கும்பம்:

Kumbam Rasiபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்:

meenamபிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.