Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (06/07/2019): இன்று சாதிக்கும் நாளாக அமையும்

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்குமேல் ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:
Rishabam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:
midhunam

உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் எதிர்பாராத நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் செல்ல நேரிடும்.

சிம்மம்:
simmam

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பணிகளில் கவனமாக இருக்கவும்.

கன்னி:
Kanni Rasi

இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்:
virichigam

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு:
Dhanusu Rasi

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.அலுவலகத்தில் சக ஊழியர் களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மீனம்:
meenam

உற்சாகமான நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். உத்திரட்டாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்