இன்றைய ராசி பலன் – 07-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiநினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பேசும்போது பதற்றம் வேண்டாம். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். மாலையில் நீண்டநாள்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் பணம் வரக்கூடும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiவியாபாரத்தில் விற்பனையை விடவும் லாபம் குறைவாகத்தான் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். பிற்பகல்வரை பணிச்சுமை அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

midhunamஅலுவலகத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நிகழும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiபிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்:

simmamசிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால், சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiசிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக் கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

துலாம்:

Thulam Rasiஇன்று உற்சாகமான நாளாக அமையும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

விருச்சிகம்:

virichigamஎதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகவே கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiஅதிகப்படியான அலுவலக வேலைகளின் காரணமாக வீட்டிலும் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வகையில் பொருள் வரவுக்கான வாய்ப்பு உண்டு. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

மகரம்:

Magaram rasiமனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வார்த்தைகளில் கவனம் தேவை. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiபிற்பகலுக்கு மேல் உடல் அசதி ஏற்படக்கூடும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். மனம் உற்சாகமாகக் காணப்படும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

meenamவராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் சிறப்பாக அமைய இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -