இன்றைய ராசி பலன் – 07-09-2020

rasi palan - 7-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பாராத சலுகைகள், பதவி உயர்வுகள் போன்றவை கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமான நாளாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மன அமைதியை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகத்துடன் செயல்படக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு நிம்மதியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சில தடைகள் ஏற்படலாம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வீட்டு தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்து விடுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதை தள்ளி வைப்பது நல்லது. எதையும் யோசிக்காமல் முடிவு செய்ய வேண்டாம். விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தை தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் முற்றிலும் நீங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். அம்பிகை வழிபாடு செய்து வருவதால் ஏற்றங்கள் உருவாகும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குழப்பங்கள் அதிகரித்து காணப்படும். எதை செய்ய நினைத்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல் ஆற்றுவது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களிடம் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. எனவே கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் முன்கோபத்தால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் மன அமைதி பெறலாம். மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்கு உரிய சந்தர்ப்பம் இது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நினைத்த படி நடக்கக் கூடிய நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நல்லபடியாக முடிவுக்கு வரும். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஓரளவுக்கு சுமாரான அமைப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் கால தாமதம் ஏற்படும். மற்றவர்களுக்கு பதில் சொல்லும் நிலையில் மன சஞ்சலங்கள் உருவாகக்கூடும். எதிலும் நிதானமும், பொறுமையும் கையாள்வது மன அமைதியை உங்களுக்கு கொடுக்கும். விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பு என்பதால் புதிய வெற்றி வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். தெய்வ வழிபாடு மன நிம்மதி தரும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த விஷயத்தையும் தீர விசாரிக்காமல் முடிவெடுக்கக் கூடாது. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்கிற பழமொழி உண்மை என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதியுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். வெளியிடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மூன்றாம் நபர்களிடமிருந்து சற்று கவனமாக இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறும். பிள்ளைகளால் மனம் மகிழும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். பொருளாதார ரீதியான சிக்கல்களை எளிதில் சமாளித்து விடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு புதிய தெம்பை கொடுக்கும். எதிர்பாராத நபர்களினால் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -