இன்றைய ராசி பலன் 07-06-2020

rasi palan - 7-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இன்று மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் போதுமான பணம் உங்களிடம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக்கூடும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நீங்கள் முக்கியமான நபராக விளங்குவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு பெரியோர்களின் ஆலோசனை பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளை பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தில் பல தடைகள் ஏற்பட்டாலும் நினைத்தபடி முடித்து விடுவீர்கள். வாழ்க்கை துணையிடம் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்க கூடும். தேவையான அளவுக்கு பணம் இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். பிரிந்துபோன நண்பர்களை சந்திக்க நிகழும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் அனைத்தும் ஆபத்தில் முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பொறுமை தேவை. குடும்பச் செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களின் செலவுகள் அதிகரித்தாலும் லாபம் எப்போதும்போல் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். கொடுத்த பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் நீங்கும். உறவினர்களால் பண உதவி கிடைக்கும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. கையில் எடுத்த காரியத்தை சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதை முடித்து காட்டுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பதனால் மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த கடன் நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதன்படி செயல்படுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எதிர்பார்த்த அரசாங்க உத்தியோகம் கைகூடிவரும். தந்தைவழி உறவினர்கள் மூலம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்க கூடும். எதிர்பார்த்த முறையில் பணம் கையில் வந்து சேர்ந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் செயல்கள் அனைத்தும் பதற்றம் இல்லாமல் செயல்பட வேண்டிய நாள். தந்தையிடம் வீண் மனஸ்தாபம் ஏற்படுவதால் அவர்களிடம் பேசும் போது பொறுமையாக பேசுவது நல்லது. உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். திருமணம் தடை நீங்கி நல்ல வரன் கைகூடிவரும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படக் கூடும். குழந்தைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் ஊழியர்களிடம் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் அதனால் அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் உற்சாகம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கக்கூடும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. நண்பர்கள் கேட்கும் உதவிகளை செய்த தருவீர்கள். சொந்த தொழிலில் வெற்றி காண்பீர்கள் . உங்களை பிரிந்தவர்கள் உங்களிடம் வந்து சேரும் வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்களுடைய பேச்சு சிறிது மனக்கசப்பை ஏற்படக்கூடும். சகோதரர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும் . வியாபாரத்தில் புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நல்லமுறையில் நிறைவேறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவனின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்புகள் ஏற்படக்கூடும். பெற்றோரிடம் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும் . உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் மனத் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில்
விற்பனையும் லாபமும் அதிகரிக்க கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -