Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 08-02-2019

12-rasi
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் சில மராமத்துப் பணிகள் செய்வதன் காரணமாக உடல் அசதி உண்டாகும். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கன்னி:
Kanni Rasi

தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறும் நாள். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஒரு சிலருக்கு வெளியூர் களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்:
virichigam

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். விசாகம் சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

தனுசு:
Dhanusu Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். லாபமும் அதிகரிக்கும். மூலம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். அதே நேரம் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சலித்துக்கொள்ளாமல் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் நன்மைகள் ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். உறவினர்களால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

மீனம்:
meenam

அனுகூலமான நாள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -