இன்றைய ராசி பலன் – 08-06-2018

astro
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiபுதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasiஉறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்:

midhunamஅலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். புதிய நண்பர்களின் சேர்க்கையும், அவர்களால் ஆதாயமும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasiதொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

சிம்மம்:

simmamபிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் உற்சாகம் ஏற்படவும் கூடும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasiவெளிநாட்டில் இருந்து நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

துலாம்:

Thulam Rasiதந்தை வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவார். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

virichigamஎதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் சற்று அதிகரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

தனுசு:

Dhanusu Rasiஎதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்காது. இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கவும்.

மகரம்:

Magaram rasiசகோதரர்கள் உங்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள். மகன் அல்லது மகனின் திருமண முயற்சிகள் நல்லபடி முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasiஅநாவசிய செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் தேவையற்ற அலைச்சல் உங்களை சோர்வு அடையச் செய்யும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மீனம்:

meenamவீடு, மனை வாங்க நினைத்த முயற்சி இன்று சாதகமாக முடியும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமாக முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.

- Advertisement -