இன்றைய ராசி பலன் – 08-10-2019

Rasi Palan

மேஷம்:

mesham
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

ரிஷபம்:

rishabam
இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் விரயத்தில் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

மிதுனம்:

Midhunam
இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கடகம்:

Kadagam
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

சிம்மம்:

simam
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

கன்னி:


இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

துலாம்:


புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:


இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்:

magaram
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

கும்பம்:


இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீனம்:


வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

இந்த நாளுக்குரிய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்