இன்றைய ராசி பலன் 08-06-2020

rasi palan - 8-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த சில விஷயங்கள் தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முயற்சியால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் செய்யும் வேலையின் மூலம் திருப்தி உண்டாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு முதலிடம் இருக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களின் வருகை உண்டு. திருமணப் பேச்சுகள் கைகூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்க கூடும். நீங்கள் வீட்டு மனை போன்ற எந்த முயற்சிகளில் ஈடுபட்டாலும் அது வெற்றியைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை தேவை. மனைவியின் உடல் நலத்தில் அக்கறையாக இருக்க வேண்டும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்டநாள் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்தில் பணவரவு உண்டாகும். விலை வாய்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பால் புது முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் விடா முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். சிக்கலான சவால்களை கையில் எடுத்து எளிதில் முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலைமை ஏற்படும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சகோதரர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுத்த கடன்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடம்பர செலவுகளால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படும். உத்யோகத்தில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்பொழுது பொறுமையாக பேசுவது நல்லது. காணாமல் போன முக்கிய பொருட்கள் இன்று உங்கள் கையில் வந்து சேரும். உத்தியோகத்தில் செய்யும் செயலுக்கு பாராட்டை பெறுவீர்கள். புது தொழில் தொடங்குவதற்கு நல்ல நாளாக அமைகிறது. தாயாரிடம் சிறுசிறு மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாக அமைகிறது. உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஆலோசனை பெறுவார்கள். வியாபாரத்தில் புது முயற்சியால் லாபம் கைகூடி வரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் அழைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாள். குடும்பத்தில் உள்ள குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்தில் பணவரவு கிடைக்கும். திருமணம் தடை நீங்கி நல்ல வரன் கைகூடி வரும். வியாபாரத்தில் புது முயற்சியால் தோல்வி காண்பீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கவனம் தேவை. புதிய முயற்சியால் ஆதாயமடைவீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்ட சாயலைப் நன்றாக செய்து முடித்து விடுவீர்கள். பிள்ளைகளிடம் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும். வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும் செலவுகள் குறைப்பதற்கு பிறரிடம் கடன் வாங்க வேண்டி வரும். உத்தியோகத்தில் மற்றவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களை சந்திக்க நிகழும். அரசாங்க உத்தியோகம் கைக்கூடி வரும். வியாபாரத்தில் லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள் ஆகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. வீட்டு மனை வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அமோகமான நாளாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். புது வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் விற்பனையும் லாபமும் அதிகரிக்கக்கூடும். நெருங்கிய நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனைவியின் உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் வந்து நீங்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியத்தை நிறைவேற்றும் நாள். எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேர்ந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கக்கூடும் அதனால் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது புது சந்தேகங்கள் மனதில் தோன்றும். உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.