இன்றைய ராசி பலன் – 9-1-2020

rasi palan - 9-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். தாய் வழியில் மன மகிழ்ச்சி கிடைக்கப் பெரும். வாகன வகையில் ஆபத்துக்கள் நேரலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள் ஒன்று செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சுபகாரிய பேச்சுக்கள் வெற்றியை தரும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. நேர விரயத்தை தவிர்ப்பதால் பல வாய்ப்புகள் நாடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். அன்பு அதிகரிக்கும். வேலை தேடுவோர்க்கு வெளியூரில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய பிரயாணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் கூடும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கடன் பிரச்சினைகள் ஏற்படலாம். எனினும் வரவிற்கேற்ற செலவுகளை சாமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகாரிக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பத்திரிக்கைத்துறை, கலைத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வீண் அலைச்சல் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சொத்துகள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். கோபத்தை குறைத்து கொள்வதான் மூலம் கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்து வரும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். பல நாள் தடைப்பட்ட நல்ல காரியம் ஒன்று இனிதே நடந்தேறும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் புரிவோருக்கு சாதகமான சூல்நிலை நிலவும். எதிர்பார்த்தபடி பணவரவு திருப்தி தரும். வெளி இடங்களுக்கு செல்லும் பொது கவனம் தேவை. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் அடைவார்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிட்டும். சுபகாரிய முயற்சிகள் கை கூடும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரம் அல்லது தொழிலில் வெற்றி காண்பீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் சற்று கவனம் தேவை. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும்.