இன்றைய ராசி பலன் – 09-07-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasiஉங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

இன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

- Advertisement -

ரிஷபம்:

Rishabam Rasiஅலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamகனிவான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

கடகம்:

Kadagam Rasiஇன்றைக்குப் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

சிம்மம்:

- Advertisement -

simmamசிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி:

Kanni Rasiகுடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

துலாம்:

Thulam Rasiவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். காரியங்களில் பொறுமை தேவை. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்:

virichigamவாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiபிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasiபிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

கும்பம்:

Kumbam Rasiபிற்பகலுக்குமேல் தாய்வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் உற்சாகமான நிலை காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மீனம்:

meenamஅன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.தேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

- Advertisement -