இன்றைய ராசி பலன் 09-06-2020

Rasi Palan

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் வெற்றிதான். அலுவலகத்தில், உங்களுக்கு தந்த பொறுப்பினை விரைவாக செய்து நல்ல பெயரை வாங்க போகிறீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. சந்தோஷமும் அதிர்ஷ்டமும் ஒருசேர வரப்போகின்றது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையையும் பொறுமையாக செய்ய வேண்டும். அவசரம் வேண்டாம். யோசித்து முடிவு எடுப்பது நன்மை தரும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்கள் இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய தினம். வார்த்தைகளை யோசித்து பேச வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனுசரித்து சென்றால் நன்மை நடக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. நீங்கள் பல பேருக்கு உதவி செய்து நல்ல பெயரை வாங்க போகிறீர்கள். இதனால் பலரது பாராட்டும் உங்களுக்கு கிடைக்கப்போகிறது. மனநிறைவோடு இந்த நாள் செல்லும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்மராசி காரர்கள் இன்று உங்களுடைய வேலைகளை பொறுப்பாக செய்து முடிக்க வேண்டும். அலட்சியமாக இருக்கக்கூடாது. யாரிடமாவது திட்டு வாங்கி விடுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கடின உழைப்பு போட்டால் வெற்றி அடையலாம்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் அனைத்தும் இன்று வெற்றியடையும். தைரியமாக புதிய முயற்சிகளை எடுக்கலாம். சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் சுபச் செலவு ஏற்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்கள் இன்று  முட்டிமோதி உங்களது வேலையை முடிக்கப் போகிறீர்கள். எப்பாடுபட்டாவது, வெற்றி அடைந்து விடவேண்டும் என்ற மன உறுதியை உங்களை மேலே உயர்த்தி விட்டுவிடும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று மனநிறைவோடு உங்களது நாளை தொடங்கப் போகிறீர்கள். இனம் புரியாத சந்தோஷம் மனதில் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிகப்படியான வருமானம் கிடைக்கப் போகிறது என்றே சொல்லலாம். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். அலுவலக பணியில் வேலைப்பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும். சமாளித்தாக வேண்டும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்கள் இன்று மன தைரியத்தோடு செயல்படவேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது. தைரியமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை மறந்துவிடாதீர்கள். மனது கொஞ்சம் சோர்வடைந்தாளும் அதிகப்படியான தோல்வியை சந்திக்க நேரிடும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அலுவலகப் பணியை, கஷ்டமான பணியைக் கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். சொந்த தொழிலில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் சுலபமாக நீங்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்கள் இன்று நினைத்தது கட்டாயம் நிறைவேறும். நிதி நிலமை சீராக இருக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. மேலதிகாரிகளை விட்டுக்கொடுத்து பேசுவது நல்லது. வேலையில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனை இருந்தாலும், வேலையை காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில் உள்ளது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.