இன்றைய ராசி பலன் – 1-08-2020

rasi palan - 1-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஆன்மீக காரியங்களில் அதிகம் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பத்திரிக்கை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும்.வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் ஈட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் படிப்படியாக நீங்குவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் உண்டு. அமைதியான சூழலில் இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. எடுத்த காரியங்கள் சில தடைகளை சந்திக்கலாம். நண்பர்கள் உதவியால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அனுகூலமான பலன்கள் உண்டு.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பத்திரிகை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் நிகழக் கூடிய சிறப்பான அமைப்பு என்பதால் உற்சாகம் தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். இல்லத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடை பெறுவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் அமையும். வீண் விரயங்கள் ஒருசிலருக்கு உண்டாகலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வாகனம் மற்றும் வீடு போன்ற விஷயங்களில் வீண் விரயங்களை சந்திக்க கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.பெண்கள் ஆடம்பரத்தை குறைத்துக்கொண்டு சிக்கனத்தை கடைபிடிப்பது உத்தமம். இனிக்க இனிக்க பேசுபவர்களை கண்டு ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு யாரையும் எளிதில் நம்பாமல் இருப்பது நல்லது. புதிய மனிதர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது தொழில் வளர்ச்சிக்கு நல்லது. ஒரு சில புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் சந்தர்ப்பங்கள் அமையும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பான அமைப்பை நல்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் உங்களுக்கு ஜெயம் நிச்சயம். கிரகங்கள் சாதகமாக இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடி வரும்.பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சிகரமான நாளாக மாற்றித் தரும். பொருளாதார ரீதியான சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே கைகொடுக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். வீடு மனை தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுச

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும்.குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பயன்களை பெறலாம். உதர சகோதரி வழியே அனுகூலமான பலன்கள் உண்டு. பெண்களுக்கு திடீர் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பழைய வீடுகளை புதுப்பிக்கும் யோகம் ஒரு சிலருக்கு வாய்க்கும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் லாபமான பலன்களை பெறலாம்.தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். வாகன வகையில் ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். சனிபகவானை வழிபட்டு வருவதால் நிறைய நன்மைகள் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பயணங்களின் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். எல்லோரையும் எளிதில் நம்பும் உங்கள் ராசிக்கு திடீர் தனவரவு உண்டாகக்கூடிய யோகம் உண்டு. பொருளாதாரப் பிரச்சினைகள் சீராக இருக்கும். புதிய வேலைவாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -