இன்றைய ராசி பலன் – 1-1-2021

rasi palan - 1-1-2021

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய வேடிக்கையான பேச்சுக்கள் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்த புண்ணியங்கள் இன்றைய நாளை உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆக மாற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல லாபம் உண்டாகும். பெண்களுக்கு இனிய நாளாக அமைய கூடும். விநாயகரை வழிபடுங்கள் இனிய நாளாக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத திருப்பங்களும், அனுகூலமான பலன்களும் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு நல்ல முன்னேற்றத்தை காணலாம். பெண்களுக்கு மனதில் புது உற்சாகம் பிறக்கும். அம்பிகையை துதியுங்கள் நல்லதே நடக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய நல்ல நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அதிர்ஷ்டமானதாக மாறக்கூடும். பெண்களுக்கு மனதில் தெளிவு உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபட நன்மைகள் பிறக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை மாறி வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கும். பெண்கள் இன்றைய நாள் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். விஷ்ணுவை வணங்க வர ஏற்றம் உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்தாலும் எடுத்த வேளையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து மற்றவர்களிடத்தில் பாராட்டுகளை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத நபர்களை சந்திக்கும் யோகமுண்டு. முருகனை வணங்குங்கள் நல்வாழ்வு பெறுவீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் தடைகளை யாவும் சுலபமாக தகர்த்தெறிந்து விடுவீர்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்க கூடிய யோகம் உண்டாகும். பெண்களுக்கு மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடைபெறும். பைரவரை வணங்கி வர தைரியம் அதிகரிக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திடீர் தனவரவு உற்சாகத்தை கொடுக்க வாய்ப்புகள் உண்டு. இதுவரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகிவிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சக்கரத்தாழ்வாரை வணங்க சங்கடங்கள் தீரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கின்றது. தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் கைகூடி வெற்றியைத் தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு கணவனுடைய ஆதரவு கிடைக்கும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்பம் குதூகலத்துடன் காணப்படும். பொருளாதாரத்தில் ஏற்ற நிலை இருப்பதால் குடும்பத் தேவைகள் எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். கடன் பிரச்சனை தீர்வதற்கு புதிய வழிபிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்கும். குலதெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாண்டு முன்னேற்றத்தை காணலாம். பெண்களுக்கு சமூகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். விக்கினங்கள் தீர்க்கும் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட நன்மை உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பதால் தாராளமாக மேற்கொள்ளலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் சுயமாக முடிவு செய்வது நன்மை தரும். மீனாட்சி அம்மனை வழிபட நல்லது நடக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு நல்ல பலன்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அடுத்த படிக்கு செல்வீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். பகைவர்களையும் நண்பர் ஆக்கிக்கொள்ள முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு மனதில் அமைதி இருக்கும். அனுமனை வழிபட சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்