இன்றைய ராசி பலன் – 1-3-2020

rasi palan - 1-3-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும் விநாயகரை வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நாளாக இருக்கும். எதிர்பாராத நபர்களை எதிர்பாராத நேரத்தில் சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். மாணவர்களின் கல்வித்திறன் அதிகரித்து காணப்படும். தொழில் துறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்தி உண்டாகும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பைரவ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் வீண் விரயங்களை சந்திக்க நேரலாம். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கால தாமதம் ஆனாலும் வெற்றி தகவல் கிட்டும். எனக்கு பிடித்தவர்கள் மூலம் சில சங்கடங்கள் நேரலாம். மாணவர்களின் கல்வியில் காணப்படும். அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான திட்டமிடல் மேலோங்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி காரணமான நாளாக மாற்றி தரும். ஓட்டுகள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர் இடத்தில் நன்மதிப்பு ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும் இனிய செய்திகள் கிட்டும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படும். வெளி இடங்களுக்கு சென்று வருவதற்கான திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காணப்படும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனமுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் இமைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு சமூகமான சூழ்நிலை நிலவும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். எலும்பு தேய்மானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும் தரகர் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உயர் கல்வி பயில்பவர்கள் சாதனைகள் புரிவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பெற்றோர்களுக்கு வாங்கிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் மரியாதை ஏற்படும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையற்ற சங்கடங்கள் உருவாகலாம். எனவே கவனமுடன் இருப்பது நல்லது. மூன்றாம் நபர்கள் இடத்தில் எச்சரிக்கை தேவை. வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூன்றாம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். திருமண வார்த்தைகள் மன நிம்மதி கொடுக்கும். பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்கள் லாபம் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.

மகரம்
மகர ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே கவனமுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் மரியாதை கிட்டும். உங்களின் நாணயமான செயல்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே கவனமுடன் இருப்பது நல்லது. மேல் அதிகாரிகளுடனான நட்பை அதிகப்படுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தங்களின் கண்காணிப்பிலேயே இருப்பது நன்மை தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் பட்டாலும் திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள்.

மீனம்
மீன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நல்ல ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி கிட்டும். வியாபாரம் செய்பவர்கள் இன்றைய நாளில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ந்து காணப்படும். பிள்ளைகளினால் உள்ளம் மகிழும் நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -