இன்றைய ராசி பலன் – 1-5-2020

rasi palan - 1-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய கூடும். சொந்தத் தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தரும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய கடன் உதவி தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். உத்தியோக உயர்வு இடமாற்றம் போன்றவற்றை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க கூடும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர் கல்வி படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தவழும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றம் புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமையும். புதிய தொழில் முயற்சிகளையும் புதிய வேலை முயற்சிகளையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். கல்வி முடிந்து வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு. பற்றாக்குறை ஓரளவிற்கு இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தாமதப்படுத்த பட்டு வந்த கடன் அடைபடும். கையில் பொருளாதாரம் எவ்வளவு வந்தாலும் நிலைபெற்று இருக்காது. குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும். பெரியவர்களின் ஆசீர்வாதம் போன்றவை கிடைக்கும். ஆன்மீகம் தலங்களுக்குச் சென்று வருதல் மற்றும் கோவில் குளம் சென்று வருதல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். மேலும் மேலதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இணக்கமான நாளாக அமையும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான நாளாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். உடலாரோக்கியம் சிறப்பாக இருந்துவரும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. வாகனம் வகையில் சுப செலவுகள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். புதிய பிரயாணங்கள் பற்றிய திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் ஆக்கம் தரும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. திருமணம் சுபகாரிய முயற்சிகளில் வெற்றியில் முடியும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலர் வீடு மனை வாங்குவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை திறம்பட சமாளித்து விடுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க கூடும். பிரிந்த குடும்பங்கள் இணைவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவிவரும். வழக்கம்போல் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்கள் வெற்றியைத் தரும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். உயர் கல்வி படிப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் அமைதி தவழும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு உங்கள் திருமணத்தை பற்றி பெரியவர்களுடன் கலந்து பேசுவதற்கு நல்ல நாளாக அமையும். மாணவர்கள் கல்வி நிலை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் மிகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றி தரும். தொழில் சம்பந்தமான காரியங்களில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்த்தவர்களுக்கு சற்று காலதாமதமாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது லாபம் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். மற்றும் எதிர்கால முதலீடு போன்றவற்றில் உங்கள் எண்ணம் உயர்வாக இருக்கும். கல்வி நிலை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். உங்கள் திருமணம் பற்றிய வீட்டில் உள்ள பெரியவர்கள் உடன் கலந்து யோசித்து செய்வது மிகவும் நல்லது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுக்கு சற்று உடல் நலம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும். கல்வி நிலை மேம்படும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு ஊடல்கள் இருந்தாலும் பிற்பகலில் ஒற்றுமை நன்றாக இருக்கும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் உங்கள் வார்த்தையில் கவனம் தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.