Rasi Palan Today : இன்றைய ராசி பலன் – 10-02-2019

12-rasi
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். வெளியில் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

புதிய முயற்சியை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையோ, முக்கிய முடிவு எடுப்பதையோ தவிர்க்கவும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியுடன் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். ஆனால், சக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

வீண் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். விசாகம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

தனுசு:
Dhanusu Rasi

மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குக் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். உறவினர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பொறுப்புகளை நீங்களே நிறைவேற்றிக்கொள்வது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

மகரம்:
Magaram rasi

உற்சாகமான நாள். சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடி வுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயன் தருவதாக இருக் கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மைகள் ஏற்படக்கூடும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

மீனம்:
meenam

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ரேவதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -