இன்றைய ராசி பலன் – 10-07-2018

12-rasi

மேஷம்:

Mesham Rasiபிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:

Rishabam Rasiஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

இன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மிதுனம்:

- Advertisement -

midhunamவெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

கடகம்:

Kadagam Rasiஉறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆயில்யம் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

சிம்மம்:

simmamமுக்கிய பிரமுகர்களின் நட்பும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்குப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் பாக்கியம் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி:

Kanni Rasiஅலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்:

Thulam Rasiஇன்று உற்சாகமான நாளாக அமையும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்:

virichigamபிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்களிலிருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு:

Dhanusu Rasiவியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மகரம்:

Magaram rasiகுலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiநண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

meenamஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும் .வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

உங்களுடைய இந்த நாள் இந்த ராசி பலன் மூலம் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறோம்.