Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (10/08/2019): தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். பணியின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் உண்டாகும் என்பதால் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் நன்மை உண்டாகும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்ப விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

சிலரால் மனச் சங்கடமும் குழப்பமும் ஏற்படக்கூடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

சிம்மம்:
simmam

பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும்.

துலாம்:
Thulam Rasi

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். தெய்வ காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்

மகரம்:
Magaram rasi

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. என்றாலும் சக பணியாளர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதல் தரும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்:
meenam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -