இன்றைய ராசி பலன் – 10-09-2019

Rasi Palan

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வேலையின் காரணமாக இன்று திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
Mesham

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

ரிஷபம்: காரிய அனுகூலமான நாள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் பொருள் வரவுக்கான வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகவே கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.
Rishabam

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

மிதுனம்: உற்சாகமான நாள். கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அதிகப்படியான அலுவலக வேலைகளின் காரணமாக வீட்டிலும் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பற்று வரவு லாபகரமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கக் கூடும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக் கூடும்.
Midhunam

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.

- Advertisement -

கடகம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது.
kadagam

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

சிம்மம்: மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். குடும்பத்தின் காரணமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும் என்பதால் உடல் அசதி உண்டாகும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
Simmam

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு தந்தை வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
Kanni

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

துலாம்: உற்சாகமான நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். மகன் அல்லது மகளின் திருமண முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகப் பணியின் காரணமாக வெளியில் செல்லவேண்டி இருக்கும். மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

Thulam

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பேச்சில் பொறுமை அவசியம்.

விருச்சிகம்: நண்பர்களின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி இன்று சாதகமாக முடியும். கேட்ட இடத்தில் பணம் கடனாகக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
Viruchigam

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு: புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தை முன்னிட்டு அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். மாலையில் சோர்வு நீங்கி தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.
Dhanusu

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்: இன்று அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி வரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. பிற்பகலுக்கு மேல் காரிய அனுகூலம் உண்டாகும். மகன் அல்லது மகனின் திருமண முயற்சிகள் நல்லபடி முடியும்.
Magaram

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
Kumbam

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம்: வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உங்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள். வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மகளின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
Meenam

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்களை சந்திக்க நேரிடும்.

உங்களுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் நமக்காக கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்