இன்றைய ராசி பலன் – 10-12-2020

rasi palan - 10-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்களை சமாளிக்க கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முதுகுவலி போன்ற தொந்தரவுகளை சந்திக்க நேரலாம்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காலையில் எழுந்திருக்கும் பொழுதே சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் வீண் பழிகளை நீக்குவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய செயல்திறன் அதிகரிக்கும். கொடுக்கப்பட்ட வேலைகளை விரைவாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். திடீர் பணவரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையலாம். எந்த விஷயத்திலும் முன்கூட்டியே சிந்தித்து வைக்காதீர்கள். அதுவாகவே நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சாதகமாகவே அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் உடன் பணிபுரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சுயதொழில் புரியும் பெண்கள் ஏற்றத்தை காண்பீர்கள். அமைதியான மனநிலை பெற தியானத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்வுடன் காணப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் ஆதரவு மனதிற்கு புதுவிதமான உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று நிறைவேறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையலாம். ஆரோக்கியத்தில் சுவாச பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நலம் தரும். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. ஒரு சிலருக்கு காலம் கடந்த பின்னர் செய்த தவறை உணர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன சங்கடங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு சிறப்பான நாளாக அமையும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான கிரக அமைப்பு இருப்பதால் திருமண வைபவங்கள் சிறப்பான முறையில் கூடி வரும். வீட்டில் மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் உங்களை புரிந்து கொள்ளாத அவர்கள் புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சில உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறலாம். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.