இன்றைய ராசி பலன் – 10-2-2020

rasi palan - 10-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சில அலைச்சல்கள் ஏற்படலாம் எனவே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை ஏற்றகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல் கிட்டும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொள்வது பிரச்சனைகளை உருவாக்கும். பெண்கள் சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு சில பிரச்சனைகள் வந்து மறையும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறையும். பிள்ளைகளின் பெற்றோர்கள் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு உற்சாகப்படுத்தும். வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் திருமண பேச்சுவார்த்தைகள் ஏற்படலாம். தயாராக இருந்து கொள்ளுங்கள். மாணவர்களின் கல்வியில் புதிய சாதனைகள் புரிவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எடுத்த காரியங்கள் தடையின்றி வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டு.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. அமைதியான சூழ்நிலையில் இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. சகோதர சகோதரிகளின் வழியே சில கசப்புகள் ஏற்படக்கூடும். எனவே வீண் பிடிவாதங்கள் தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். மன நிம்மதி இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். பிரிந்த குடும்பங்கள் சுப நிகழ்ச்சிகளில் ஒன்றினைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. இறை வழிபாடுகள் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். எனினும் லாபம் காண்பீர்கள். சுபகாரியங்களுக்காக சில அலைச்சல்கள் சந்திக்க வேண்டி நேரலாம். திருமணப் பேச்சு வார்த்தைகள் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பயணங்களால் ஆதாயம் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் உதவி தகுந்த சமயத்தில் கிட்டும். கணவன் மனைவியிடையே சுமூகமான சூழ்நிலை நிலவும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப விரயங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். எனினும் தகுந்த சமயத்தில் தேவையான பணம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை என்ற வாக்கிற்க்கிணங்க நீங்கள் விட்டுக் கொடுப்பதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்த பிறகு முடிவெடுப்பது நல்லது.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு சவால் விடும் ஒரு நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சவால்கள் நிறைந்த பணிகள் கொடுக்கப்படும். சக பணியாளர்கள் மூலம் பாராட்டப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய அனுபவங்கள் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில மனக்குழப்பங்கள் ஏற்படும். இறைவன் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சுயதொழில் புரிபவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சில உடல் உபாதைகள் ஏற்படலாம். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நலம் தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. வாகன வகையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். வெளிநாடு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. பெண்கள் குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அமோக வெற்றி கிட்டும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல்கள் கிட்டும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. சகோதர சகோதரிகளின் மூலம் தேவையற்ற குழப்பங்கள் உருவாகலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் நாளாக இருக்கும். எதிர்பாராத திடீர் பண வரவால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்றைய நாளில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பங்குச்சந்தை விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். புதிய விஷயங்களை கற்று தேடுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி உண்டு.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகளில் லாபம் காணப்படும். புதிய தொழில் வாய்ப்புகளை நோக்கி காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். உரிய நேரத்தில் தேவையான பணவரவு கிட்டும். எதிர்பாராத நபர்கள் மூலம் நல்ல செய்திகள் கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன நிம்மதி கிட்டும். மாணவர்களின் கல்வியில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்கள் இறை வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். வெளிப்படையாக மனம் விட்டு பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தாய்வழி உறவினர்கள் மூலம் நல்ல தகவல் உண்டு. வியாபாரத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில அலைச்சல்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.