இன்றைய ராசி பலன் – 10-3-2020

rasi palan - 10-3-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கொடிய நாளாக இருக்கும். வாகனங்களில் செல்லும்பொழுது எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பு பெருகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நிலவும். ஆஞ்சநேயர் வழிபாடு இன்றைய நாளை வளமாக்கி தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி கைகூடும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்த மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி சம்பந்தமான விஷயங்களில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய பொருட்களை வாங்கி மகிழும் யோகமுண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் இதில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம்.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களால் தேவையற்ற சண்டைகள் ஏற்படலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் சற்று அறிவாற்றலுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் உண்டாக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சக நண்பர்களின் உதவி தகுந்த சமயத்தில் கிட்டும். கணவன் மனைவி இடையே சண்டைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் அலுமினிய செய்திகள் வந்து சேரலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு சிலரில் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்திற்காக நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தகுந்த பலன் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிட்டும். பெண்களுக்கு சேமிப்பு அதிகரிக்கும். இல்லத்தில் குதூகலத்துடன் காணப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. மன நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு வெளிவட்டார நட்பு விரிவடைவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. வங்கிக்கடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி கைகூடும். உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் இனிய நாளாக இருக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை எதிர்கொள்ளும் நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் வேலை பளு காரணமாக சில சங்கடங்கள் நேரலாம் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும் குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம் வியாபார வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பயணங்களில் ஆதாயம் உண்டு எனவே தைரியமாக மேற்கொள்ளலாம். மாணவர்களின் கல்வியில் அதிக அக்கறை தேவைப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவருக்கும் இடையேயான பரஸ்பர அன்பு அதிகரித்து காணப்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வேலைவாய்ப்பை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கி காணப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரயங்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களில் சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உடல் ஆரோக்கியத்திற்கு சிறு தொகை செலவிட நேரிடலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் இருக்கும் பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளின் கல்வியில் அக்கறை கொள்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகள் குறைந்து மன நிம்மதி கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் அபாரமான நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். பெண்கள் தெய்வீக காரியங்களில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் நண்பர்களின் மூலம் மேகலை அடைவார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் சில செயல்கள் பெற்றோர்களை வியக்க வைக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி கைகூடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைபிடிக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் புரிபவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளால் வீண் செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எந்த ஒரு காரியத்தை செயல்படுத்துவது ஆனாலும் மிகுந்த பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருப்பவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். பெண்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -