இன்றைய ராசி பலன் – 10-4-2020

rasi palan - 10-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். இனிமையான நாளாக அமையும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் நாளாகும். பிற்பகுதியில் சற்று அலைச்சல் இருந்தாலும் நன்மையாகவே முடியும். கணவன் மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும். சொந்த தொழிலில் உள்ளவர்களுக்கு அலைச்சல் கூடுதலாக இருக்கும். இருப்பினும் நன்மையாகவே முடியும். உங்கள் பேச்சுக்கான செல்வாக்கு கூடும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் சொத்து வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் வெற்றி கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிகழும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே உறவு நிலை சீராக இருந்து வரும். குழந்தைகளின் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வி நிலை சிறப்பாக இருக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புது தொழில் முயற்சிகள் மற்றும் புதிய கடன் வாங்குதல் போன்றவற்றை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே இருக்கும். சுப காரியத்தை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதுவிதமான அலைச்சல்கள் கிடைக்கும். வீட்டில் உள்ள மூத்தவர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை கிடைக்கும். கல்வி சிறப்பாக இருக்கும். வரவேண்டிய பணம் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு. எதிர்பார்த்த நண்பர்களை சந்திக்க நேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியும் செலவினங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. நாளில் பிற்பகுதிக்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்கள் இன்றைய நாளில் ஒரு உன்னதமான நாளாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் சிறப்பானதொரு நிலையை அடைவார்கள். வெளிநாடு பிரயாணம் வெளியூர் பிரயாணம் போன்றவற்றை திட்டமிடுவீர்கள். எதிர்காலத்தை பற்றிய திட்டமிடுதல் சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். ஒரு சிலருக்கு சொத்து மற்றும் வாகன வகையில் சுபச்செலவுகள வர வாய்ப்புண்டு.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப உறவு மேம்படும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகத்தில் அலைச்சல் இருந்தாலும் வேலையில் நிம்மதி கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் தேடி வரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். பேச்சுவார்த்தையில் சற்று கவனம் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு சமமான நாளாகவே இருக்கும். பற்றாக்குறை இருந்து வரும். குழந்தைகளின் மன கவலை உண்டாக வாய்ப்புண்டு.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு சுமுகமான சூழ்நிலை இருக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவு மேம்படும். ஒரு சிலருக்கு வெளியூர் பிரயாணம் உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே அமையும். புது தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். வாகன வகையிலும் சொத்து வகையிலும் ஆதாயம் உண்டு. கைத்தொழில் மேம்படும். முகம் பிரகாசமடையும் எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பது சம்பந்தப்பட்ட வகையில் சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலை சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அவர்களுடைய காரியங்கள் வெற்றியடையும் சுபகாரியங்களை பற்றிய பேச்சும் சிந்தனையும் ஏற்படும் நாள். யோகத்தை தரக்கூடிய நாளாகவே இன்றைய நாள் உள்ளது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகும். பொருளாதார வளர்ச்சி உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சனைகள் வந்து செல்ல வாய்ப்புண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்பாடுகளும் சிந்தனைகளும் வெற்றியை கொடுப்பதாக அமையும். நாளில் பிற்பகுதியில் சற்று அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.