இன்றைய ராசிபலன் 11-06-2020

Rasi Palan
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உங்களது செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். வீண் விரையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். அவசரம் வேண்டாம். பொறுமை அவசியம்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பொறுப்போடு, உங்களது வேலையை செய்து முடிப்பீர்கள். இதனால் அலுவலகத்தில் நல்ல பெயர் வாங்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த நஷ்டத்திற்கு தீர்வு கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை தாராளமாக எடுக்கலாம். நிச்சயம் வெற்றிய உண்டு. தேவையில்லாத பயத்தை விட்டு தைரியத்தோடு செயல்பட்டால், முழு வெற்றியை அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவையற்ற மனபயம் தோல்வியை தரும் என்பதை மறக்காதீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு இன்று அமோகமான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. குளிர்ச்சியான உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று சிந்தித்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். முடிந்தவரை முடிவை நாளை தள்ளிப் போடுங்கள். அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டு, அடுத்தவர்களின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு பொறுமையோடு இருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று செலவு சற்று அதிகரிக்கப் போகிறது.  வருமானம் குறைவாகத்தான் இருக்கும். சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனை இன்று ஒரு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக பொழுதை கழிக்க போகிறார்கள். வீண் விரையம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணி எப்போதும் போல், செல்லும். வியாபாரத்தில் அவ்வபோது மந்தமான சூழ்நிலை ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்கு இன்று மன தைரியம் அதிகரிக்கப் போகின்றது. இருப்பினும் சில காரியங்களை யோசித்து செய்வதன் மூலம் பிரச்சனைகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். உங்கள் வீட்டு விவகாரங்களை, மூன்றாவது மனிதரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளவும். அனாவசிய பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று, உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிக்கப் போகிறீர்கள். இதனால் பலரின் பாராட்டு உங்களுக்கு கிடைக்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. மொத்தத்தில் மனநிறைவோடு இந்தநாள் செல்லும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் பேச்சினால் விவகாரங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை விட்டுக்கொடுத்து சென்றால் நல்ல பலனை பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று எதை தொட்டாலும் வெற்றி தான். புதிய முயற்சிகளில் தாராளமாக, தைரியமாக ஈடுபடலாம். வெற்றியின் காரணமாக சற்று தலைகனம் வர வாய்ப்பு உள்ளது. தன்னடக்கத்தை தவற விட்டுவிடாதீர்கள். தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -