இன்றைய ராசி பலன் – 10-06-2021

rasi palan - 10-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இடைநின்ற பணியை மீண்டும் தொடரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வரவுக்கு மீறிய செலவு அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டு. கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேற வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை இடையூறு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி காணலாம். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உரிய மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் அதிகரித்து காணப்படும். உங்களை புரிந்து கொண்டு உங்கள் குடும்பத்தினர் நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்டநாள் வசூலாகாத பாக்கிகள் வசூல் ஆகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயலாற்ற வேண்டியதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களிடம் உதவிகளை பெற்றுக் கொண்டு சிலர் உங்களையே உதாசீனப்படுத்த வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். சக பணியாளர்களின் ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் வந்து சேர வாய்ப்புகள் என்பதால் கவனம் தேவை.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் சமாளிக்கக் கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான பிரச்சனைகள் தீரும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து தொலைதூர நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க பார்ப்பீர்கள். ஆடம்பரத்தை குறைத்து கொள்வது.

- Advertisement -