இன்றைய ராசி பலன் 10-06-2020

Rasi Palan
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எடுத்த காரியத்தை சுலபமாக முடித்து விடுவீர்கள். சுறுசுறுப்பு அதிகரிக்கப் போகின்றது. பயமில்லாமல் புதிய முயற்சிகளை தொடங்கலாம். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்தத் தொழில் முன்னேற்ற தோடு செல்லும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வருமானத்திற்குல், செலவை அடக்கிக் கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டாம். இதுநாள் வரை வியாபாரத்திலிருந்த மந்தமான சூழ்நிலை சரியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரான தினமாக தான் இருக்கப் போகின்றது. அநாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் விவாதம் வேண்டாம். அலுவலகப் பணியை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். உங்களது பணியை நீங்கள் செய்வது உத்தமம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று எல்லோரிடத்திலும் நல்லபெயர் வாங்க போகிறீர்கள். அந்த அளவிற்கு உங்களது வேலை சுறுசுறுப்பாக இருக்க போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள்.

- Advertisement -

சிம்மம

சிம்ம ராசிகாரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்படப் போகிறீர்கள். இதுநாள்வரை முடியாமல் இருந்த சில வேலைகள், இன்று, ஒரு நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணியில் மேலதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சற்று சுமாரானநாளாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால், அனுசரித்து செல்வது நல்லது. தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு எந்த வழியில் வரும் என்று தெரியாது. சம்பள உயர்வு, பதவி உயர்வு இப்படி நல்ல செய்தி வந்து சேர அதிக வாய்ப்பு உள்ளது. மன நிம்மதியோடு இருக்க போகிறீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாகத்தான் இருக்க போகின்றது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதாக இருந்தால், இன்று வாங்கலாம். இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் அது உங்களுக்கு லாபத்தை ஈட்டித்தரும் வகையில் அமையும்.

தனுச

தனுசு ராசிகாரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்க போகின்ற நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பணவரவு சந்தோசத்தை தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மனமகிழ்ச்சி அடையப் போகிறீர்கள். சொந்த தொழிலில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் சுலபமாக நீங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று உங்களது வேலையை நீங்களே செய்து முடிப்பது உத்தமம். யாரையும், நம்பி எந்த பொறுப்பையும், ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய பொருட்களை நீங்களே பத்திரமான இடத்தில் வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை சற்று இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எதையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். வரப்போகும் நாட்களில் கஷ்டங்கள் குறையும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். பொறுமையாக இருப்பது உத்தமம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாகத்தான் இருக்க போகின்றது. வருமானத்தை மட்டும் கொஞ்சம் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அனாவசிய செலவு வேண்டாம். அலுவலகப் பணியில் இன்னும் சுறுசுறுப்போடு ஈடுபட்டால் வெற்றி அடைய அதிக வாய்ப்பு உள்ளது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -